மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சுங்க கட்டணம் தர மறுத்து ஊழியர்களிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றிய நிலையில் கையில் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த ஊழியர்கள் அவரை மடக்கிபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இவர்களில் 5பேர் தப்பியோடிய நிலையில் அவர்கள் தேனியை நோக்கி செல்வதாக போலீசாருக்கு தகவல்
கிடைத்ததை தொடர்ந்து போலீசார்கள் மடக்கிபிடிப்பதற்கான உஷார் நிலையில் இருந்தனர். அப்போது உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் காரில் வந்துகொண்டிருந்தபோது போலீசாரை கண்டு காரில் இருந்தவர்கள் தப்பி ஆட்டோவில் ஓட முயன்றனர். உடனே போலீசார் ஆட்டோவை நோக்கி பின்தொடர்ந்து மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசார் விசாரனை நடத்தியதில் என்னூரைச்
சேர்ந்த தனசேகரன், சென்னையைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ஹரிகிருஷ்ணன், வேலூரைச் சேர்ந்த துளசிராஜன், மற்றும் மதுரையைச் சேர்ந்த ரகுபதி என தெரியவந்தது. அவர்களிடமிருந்து 4 கள்ள துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
திருமங்கலம் சுங்கச்சாவடியில் துப்பாக்கிசூடு நடத்தி தப்பியோடிய 5 நபர்களை உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
எழுதியவர்: mohan August 29, 2019, 6:16 pm




You must be logged in to post a comment.