திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையத்தின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை மற்றும் வரலாற்று துறையில் பயிலும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அதன் ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி திருநெல்வேலி மாவட்டத்தின் தொன்மையையும் பண்பாட்டினையும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.அருங்காட்சியகத்தில் உள்ள அரும் பொருள்களின் பெருமைகளையும் மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். இதன் மூலம் மாணவ மாணவிகள் வரலாற்றை அறிந்து கொண்டு பயன்பெற்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.