18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் விவசாயிகளிடம் பாலித்தீன் பைகளை பறிமுதல்

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் விவசாயிகளிடம் பாலித்தீன் பைகளை பறிமுதல்

எழுதியவர்: mohan August 29, 2019, 3:32 pm

திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட், வணிக வளாகம், மளிகைக் கடைகள், உரக்கடை , பேக்கரிகள், பொட்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் தமிழக அரசால் கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் பாலித்தீன் கப், போன்றவர்கள் இருக்கிறதா என நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி தலைமையில் திடீரென ஆய்வு செய்தனர்.நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் விவசாயிகள் சிலர் பாலிதீன் பைகளில் மல்லிகைப்பூ, ஜாதிப்பூ அரளிப்பூ உள்ளிட்ட பூக்கள் அடைத்த பைகளை கொண்டு வந்திருந்தனர்.

         இந்தப் பைகளையும், பூக்களையும் உடனடியாக அதிகாரிகள் பறிமுதல் செய்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பாலிதீன் போன்றவைகளில் பூக்களை அடைத்து விற்பனை செய்வது தவறான செயலாகும், இதுபோன்ற செயல்களில் விவசாயிகள் ஈடுபட்டால் காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் விவசாயிகள் பொதுமக்கள் வணிகர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து உடனடியாக இது போன்ற பொருட்களை விற்க முன் வரக் கூடாது என எச்சரிக்கை செய்து அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.    சில வணிக கடைகளில் சுமார் 100 கிலோ எடையுள்ள பாலிதீன் பைகளை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்தில் கொண்டு வந்து அங்கிருந்து தீவைத்து கொளுத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது திண்டுக்கல் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் உதவியாளர் தங்கராசு,  சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் , சுகாதார மேற்பார்வையாளர்கள் மஞ்சுளா கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!