18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொடர் மின்வெட்டு.கண்டுகொள்ளுமா மண்டபம் மின்வாரியம்?

தொடர் மின்வெட்டு.கண்டுகொள்ளுமா மண்டபம் மின்வாரியம்?

எழுதியவர்: mohan August 29, 2019, 3:22 pm

மண்டபம் பேரூராட்சி 12 வார்டு பகுதி களஞ்சியம் நகர் ஆகும்.இங்கு பல வீடுகளில் சமீப காலமாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.மின் பழுதை சீர் செய்ய மின் வாரிய ஊழியர்களை தொடர்புகொண்டால் யாரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்று பதில் சொல்வதில்லை.அப்படியே பேசினால் பொதுமக்கள் மீது எரிந்து விழுகின்றனர்.இதுகுறித்து அப்பகுதியில் வசித்து வரும் கார்த்திக் என்பவர் கூறுகையில் இந்த பகுதியில் கடந்த 3 நாட்கள் மின்சாரம் இல்லை,

எங்கள் ஊரில் லயன் மேன் இல்லை அதனால் வேறு நபர்கள் வேலை செய்தும் மின்சாரம் சரியாக வரவில்லை. மறுபடியும் போன் செய்தபோதும் யாரும் வரவில்லை.மின்சாரம் இன்றி நாங்கள் அவதிபடுகிறோம்.எங்கள் பகுதியில் வசித்துவரும் பள்ளி.கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் மின்சாரமின்றி எப்படி வீட்டில் படிக்க இயலும்.மின்வாரியத்தினரின் இந்த மந்தமான செயலால் எங்கள் பகுதி மக்கள் பல விதத்திலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளோம்.ஆகவே உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதி மக்களின் குறைதீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!