18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் போராட்டம்

100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் போராட்டம்

எழுதியவர்: mohan August 29, 2019, 2:42 pm

திருவண்ணாமலை ஒன்றியம், சு. பாப்பம்பாடி கிராமத்தில் 100 நாள் வேலை கேட்டு 200க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சு.பாப்பம்பாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த கிராமத்தில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து, இதுநாள் வரை 100 நாள் வேலை வழங்கவில்லை என இப்பகுதி கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். புதன் அன்று, மக்கள் ஒன்றுதிரண்டு அனைவருக்கும், வேலை வழங்கிட கேட்டு, அகில இந்திய வி. தொ. ச வட்டார செயலாளர் ஜெயராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகலநாதன், சிஐடியு மாவட்ட செயலாளர் பாரி,தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.கே வெங்கடேசன் ஒன்றிய செயலாளர் கே.வெங்கடேசன் நிர்வாகி சிவா, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . தொடர்ந்து கோரிக்கை மனுவை வட்டர வளர்ச்சி அலுவலரிடம் அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!