தமிழக முதல் அமைச்சரின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்து வருகின்றது.இந்த முகாம் கீழக்கரை குரூப் கிராம நிர்வாக அலுவலத்தில் கீழக்கரை மண்டல துணை வட்டாச்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.இந்த முகாமில் உத்திரகோசமங்கை வருவாய் ஆய்வாளர் ஹேமா,கீழக்கரை குரூப் கிராம நிர்வாக அலுவலர் ஆதிலெட்சுமி,கீழக்கரை நகராட்சி தலைமை எழுத்தர் தமிழ்செல்வன்,கீழக்கரை குரூப் தலையாரி சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.இந்த முகாமில் மக்கள் டீம் அப்துல் காதர் மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்களுக்கு உதவிகள் செய்தார்.இந்த முகாம் இன்று29.08.19 பகல் இரண்டு மணி வரை நடைபெற இருப்பதால் பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.
கீழக்கரையில் தமிழக முதல்வரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்.
எழுதியவர்: mohan August 29, 2019, 2:24 pm




You must be logged in to post a comment.