17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

இராமநாதபுரத்தில் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

எழுதியவர்: mohan August 29, 2019, 2:15 pm

இராமநாதபுரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ராமநாதபுரம் ஜாஸ் கேட்டரிங் கல்லூரி முன் துவங்கிய பேரணியை ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் ரூபேஷ் குமார் மீனா தொடங்கி வைத்தார்.போதை பொருள் நுண்ணறிவு குற்ற புலனாய்வு ஆய்வாளர் முத்துக்கண்ணு, அறம் விழுதுகள் அறக்கட்டளை தலைவர் அ.முகமது சலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மன நல மருத்துவர் பெரியார் லெனின், அறக்கட்டளை சட்ட ஆலோசகர் எஸ்.ஜே.ஷேக் இபுராஹிம் ஆகியோர் பேசினர். ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அரண்மனை வாசல் பகுதியில் நிறைவடைந்தது. போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீங்குகள், சமுதாய சீரழிவு, நன்னடத்தை பாதிப்பு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. போதை பொருள் நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் தங்க முனியசாமி, தலைமை காவலர்கள் செல்வம், முத்துராமலிங்கம், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!