18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்

எழுதியவர்: mohan August 28, 2019, 3:34 pm

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் மேல்பாலானந்தல் கிராமத்தில் நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துகொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டார்.மொத்தம் 211 கோரிக்கை மனுக்களை மேல்பாலானந்தல் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்களிடம் கொடுத்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இதுவரை நடைபெற்றுள்ள முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 14 ஆயிரத்து 419 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இத்திட்டம் இன்று துவங்கி வருகிற சனிக்கிழமை வரை நடைபெறும்.நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் , கிராமப்பகுதியில் உள்ள மக்களிடம் முன்னறிவிப்பு செய்து விட்டு மனுக்களை பெறுவதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் அலுவலர்களும் செயல்பட்டு வருகின்றனர்.பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக எழுதி மனு பெற அவரு மனிதர்களிடம் கொடுத்து தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!