17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆட்டோ டிரைவா் கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள்..

ஆட்டோ டிரைவா் கொலை வழக்கில் மூவருக்கு ஆயுள்..

எழுதியவர்: mohan August 28, 2019, 1:24 pm

கன்னியாகுமரி மாவட்டம் , விரிகோடு பகுதியை சேர்ந்தவர் ராஜன் (42) இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரெஜி(33) என்பவருக்கும் பெண்களை கேலி செய்வது சம்பந்தமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது. 5.07.2014 அன்று இவர்களுக்குகிடையே ஏற்பட்ட தகராறில் ரெஜி, அவரது மனைவி அஜிதா மற்றும் ரெஜியின் சகோதரர் ஷாஜி (34) ஆகியோர் சேர்ந்து ராஜனை தாக்கி கொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சம்பந்தமான விசாரணை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் குற்றவாளிகள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 5000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!