17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நோய்தொற்று ஏற்ப்படும் அபாயத்தில் சேக்கிபட்டி தெற்க்கு தெரு ஆதிதிராவிடர் காலணி…

நோய்தொற்று ஏற்ப்படும் அபாயத்தில் சேக்கிபட்டி தெற்க்கு தெரு ஆதிதிராவிடர் காலணி…

எழுதியவர்: mohan August 28, 2019, 11:38 am

மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டி ஊராட்சியில் உள்ள தெற்க்கு தெரு ஆதிதிராவிடர் காலணியில் அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கால் தொற்று நோய் ஏற்ப்படும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. பல ஆண்டுகாலமாக பல முறை கோரிக்கை வைத்தும் இந்த பகுதியில் எந்த அடிப்படை திட்டங்களும் இது வரை செயல்படுத்தப்படவில்லை. இங்குள்ள பல தெருக்களில் கழிவுநீர் காழ்வாய் அமைக்கப்படாததாலும் பல வீடுகளுக்கு இதுவரை தனிநபர் கழிப்பிடம் கட்டித் தரப்படாததாலும் சாக்கடை கழிவுகளும் கழிவுநீரும் மழைநீருடன் கலந்து தெருக்களிலேயே நிற்க்கின்றது.

பல தெருக்களிலும் இதுவரை சிமெண்ட் சாலை அமைக்காததால் கழிவுநீர் கலந்த மழைநீர் சிறு மழைக்கே தெருக்களில் தேங்கி சேரும் சகதியுமாக காட்சி தருகின்றது. சேக்கிபட்டி ஊராட்சியில் சேரும் குப்பைகளையும் காலணி தெருவின் ஆரம்பத்திலேயே கொட்டி குப்பைமேடாக காட்சியளிக்கின்றது. இதனால் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு இதே பகுதியில் பலர் டெங்குகாய்சலால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதியுற்றனர். சிறு குழந்தைகளும் வயதானவர்களும் இந்த சாலையில் நடந்து செல்லும்போது கீழே வழுக்கி விழுந்து காயம்படுவதும் தொடர் கதையாக உள்ளது. தற்போது இந்த பகுதியில் உள்ள ஒருசிலருக்கு காய்ச்சல் தலைவலி போன்ற தொந்தரவுகள் ஏற்ப்பட துவங்கியுள்ளது. எனவே மக்கள் அதிக அளவில் பாதிப்பிற்க்கு உள்ளாகும் முன்னதாகவே தமிழக அரசும் அரசு அதிகாரிகளும் போர்கால. அடிப்படையில் காலணிபகுதிக்கு வருகை தந்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதுடன். மருத்துவ பரிசோதனைகளையும் செய்து நோய் தொற்று ஏற்ப்படாமல் பாதுகாக்க வேண்டும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!