தூத்துக்குடி கேவிகே நகரை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி மகன் சரவணன் (35). இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர் மீது ஏற்கனவே 3 கொலை வழக்கு உள்ளதாகவும் அந்த வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இன்று 27.08.19 மாலை திடீரென சரவணன் வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது. இதனால் சரவணனின் மனைவியும் மற்றும் அப்பகுதி மக்களும் அதிர்ச்சியடைந்தனர்.இது குறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் டவுன் டிஎஸ்பி பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். இறந்தவர் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை குறித்து வழக்குப்பதிந்து மத்தியபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் வீடு புகுந்து இளைஞர் வெட்டிக்கொலை.
எழுதியவர்: mohan August 27, 2019, 7:48 pm




You must be logged in to post a comment.