சென்னை மயிலாப்பூரில் தனியார் மருத்துவ அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசுகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆண்களை விட பெண்களே அதிக முக்கியத்துவத்தை அளிக்கிறார்கள்ர். ஆனால் பெண்கள் முன்பு போல் இல்லாததால் பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது.ஆங்கிலமும், நகர வாழ்க்கையும் நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தையே சீரழித்துக் கொண்டிருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் 30 சதவிகித பெண்களே பெண்மையுடன் இருக்கின்றனர். அப்படி பெண்மையுடய பெண்களை தெய்வமாகக் கருதுகிறேன். மேலைநாட்டுப் பெண்களைப் போன்று இந்திய பெண்களும் பெண்மையை இழந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது” என பேசியுள்ளார்.இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தியை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்ட தலைவர் கமலா ,மாவட்ட செயலாளர் பூமயில், மாவட்ட பொருளாளர் விஜயலெட்சுமி, புறநகர் செயலாளர் ஜெயலெட்சுமி மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.