தர்மபுரி மாவட்டம் பெண்ணகரம் வட்டம் பிக்கம்பட்டியைச் சேர்ந்தவர் காளிதாஸ். மருத்துவர் சமூகத்தை சேர்ந்தவர். தாளப்பள்ளத்தைச் சேர்ந்தவர் ராஜா. மேலாதிக்க சமூகத்தை சேர்ந்தவர். காளிதாஸ் மகன் அஜித்குமார். ராஜா மகள் பிரியா. இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகினர். இதனால் ஆத்திரமடைந்த ராஜாவின் உறவினர்கள் தவமணி, பாஸ்கரன், தர்மலிங்கம் ஆகியோர் தலைமையில் அஜித்குமாரின் பெற்றோர் மற்றும் மிக நெருங்கிய உறவினர்களை காரில் கடத்தி தாளப்பள்ளம் ராஜா வீட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை நிர்வாணப்படுத்தி தென்னை மரத்தில் கட்டி வைத்து ஆயுதங்களால் தாக்கியும், நெருப்பால் சுட்டு காயப்படுத்தினர். அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் அநாகரிகமாக பேசி மேலாதிக்க சாதிய வன்கொடுமை செய்துள்ளனர். தாசம்பட்டி , ஒகேனேக்கல் காட்டு பங்களாக்களில் அடைத்து 3 நாட்கள் தொடர்ந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். உச்சகட்ட கோபத்தில் அஜித்குமார் தாயாரின் பிறப்பு உறுப்பில் கம்பால் தாக்கியதில் ரத்தப் போக்கு ஏற்பட்டு கோமா நிலையை அடைந்துள்ளார். இத்தகைய மனிதநேயமற்ற வன்கொடுமை செயலில் ஈடுபட்டவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட காளிதாஸ் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம், நகர் மருத்துவர் சமூக சங்கம் சார்பில் ராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் நகர் தலைவர் உமாநாத் தலைமை வகித்தார். நகர் செயலர் டி.எம்.பழனி, பொருளாளர் ஆர்.முருகாண்டி முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் எம்.நடேசனார், பொதுச் செயலர் ஏ.ராஜன், மாநில பொருளாளர் எஸ்.குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பெண்ணகரம் அருகே வன்கொடுமை செயலை கண்டித்து மருத்துவர் சமூகத்தினர் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan August 27, 2019, 7:19 pm




You must be logged in to post a comment.