18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நகராட்சி » பிரச்சனை » பிற செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு முதல் மரியாதை கொடுத்தே ஆக வேண்டும்…

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு முதல் மரியாதை கொடுத்தே ஆக வேண்டும்…

எழுதியவர்: ஆசிரியர் April 7, 2017, 11:58 pm

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் கிழக்கு கடற்கரை சாலை அருகே அமைந்துள்ள ஊரணியில் கிணறு வெட்டும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் முழுதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் கண்மாய், ஊரணி போன்ற நீர் நிலைகளில் கிணறு அமைத்து அதன்மூலம் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் எஸ்.பி.மணிவண்ணன் அறிவுறுத்தலின் பேரில் ஏ.டி.எஸ்பி இன்பமணி கீழக்கரை டி.எஸ்.பி மகேஸ்வரி தலைமையிலான போலீசார் கடந்த இரண்டு நாட்களாக ஜேசிபி இயந்திரம் மூலம் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டிய துறையினரான ஊரக வளர்ச்சி துறை குடிநீர் வடிகால் வாரியம் போன்ற துறையினர் சாலைகளில் உடைந்து வீணாகும் காவிரி கூட்டு குடிநீர் குழாய்களை சரிசெய்யவும், இதுபோன்ற நீர் நிலைகளில் குளம் அமைக்க முன்வராத நிலையில் இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினரின் இதுபோன்ற சமூக பணிகளை இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பெரிதும் பாராட்டுகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!