17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » SDPI கட்சியின் போதைக்கு எதிரான தெருமுனை கூட்டம்

SDPI கட்சியின் போதைக்கு எதிரான தெருமுனை கூட்டம்

எழுதியவர்: mohan August 27, 2019, 6:58 pm

தேசிய கட்சியான SDPI_கட்சியின் கீழக்கரை நகர் சார்பாக 26/08/2019 போதைக்கு எதிரான தெருமுனை கூட்டம் நகர் துணை தலைவர்_ஹாஜா அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது…மேற்க்குகிளை மற்றும் கிழக்கு கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.நகர் பொருளாளர்_சகுபர் சாதிக் தொகுத்து வழங்கினார்…இராமானதபுரம் சட்ட மன்ற தொகுதி மீடியா துறை மற்றும் நகர் செயற்குழு உறுப்பினர் கீழை அஸ்ரப் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்..அதனை தொடர்ந்து கருத்துரை நகர் தலைவர் ஹமீது பை சல் வழங்கினார்..கருத்துரை_தொகுதி துணை தலைவர் அபுபக்கர் சித்திக் வழங்கினார்..சிறப்பு அழைப்பாளரக தொகுதி இணை செயலாளர்_ஜாண் முஹம்மது கலந்து கொண்டார்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கீழக்கரை நகர் தலைவர் வாழ்த்துரை வழங்கினார்..மாநில பேச்சாளர்_அப்துல் ஜெமீல் சிறப்புரை யாற்றினார்..இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுமக்களுக்கும் வியாபாரிகள் மாணவ மாணவியர்களுக்கு இடையூரக அமைந்து இருக்கும் கடைஎண் ( 6842,6843 )இரண்டு மதுக்கடைகளையும் தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் 31/08/2019 அகற்ற வேண்டும் அகற்ற வில்லையென்றால் பூட்டுப்போடும் போராட்டம் வருகின்ற 01/09/2019 நடத்துவதாக இந்த கூட்டத்தில் வாயிலாக கேட்டுக்கொள்ளபடுகின்றது.. அரசுமருத்துவ மனையில் பிணவரையில் கட்டிடடத்தை விரிவாக்கம் குளிருட்டும் வசதி மற்றும் பெண்மருத்துவர் அவசரசிகிச்சை உள்ளிட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவேண்டும். சக்கரக்கோட்டை மேம்பாலத்தின் பனிகளை மக்களின் நலனை கருத்தில் கொண்டு பனியே துரிதப்படுத்த கேட்டுக்கொள்ளப் படுகிறது.கீழக்கரை பேரூந்து நிலையத்திற்க்கு அனைத்து பேரூந்துகளும் வந்து செல்ல சம்பந்தபட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.கீழக்கரை 3வதுவார்டு பகுதியில் உள்ள குப்பைமேட்டை சுத்தம் செய்து மக்களுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு பயன்தரும் வகையில் விளையாட்டு பூங்கா அமைத்து தர நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்ளபடடுகின்றது..கீழக்ககரை வடக்குத்தெரு சங்குமால் பாதையே சீரமைத்து சாலைவசதி செய்திட வேண்டுமென நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்ளபடுகிறது.சின்னகடைத்தெரு,அத்தியிலைதெருஇஸ்லாமிய பைத் த்துல்மால் எதிரே ஜின்னா தெரு பகுதியிலும் கால்வாய் மூடிகள் அனைத்தும் உடைந்து இரவில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளும்,வாகனகளும் உள்ளே விழுந்து செல்கின்றனர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று கேட்டு கொள்ள படுகின்றது…

சின்னகடைத்தெரு அதியிலைதெரு ரோடு மிகவும் மோசமாக பழுதடைந்து காணபடுகின்றது…நகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் உடனடியாக ரோடு போடுவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்ளபடுகின்றது.இந்த போதைக்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் திருப்புல்லாணி நகர் தலைவர் குத்புதீன்,செயலாளர்_ஹனிபாமற்றும்நிர்வாகிகளும்,இராமானதபுரம் நகர் தலைவர் ஜெமீல்,செயலாளர் ஜகுபர் சாதிக் மூர்த்தி அவர்களும் 80_க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்…இறுதியாக நகர் செயலாளர் _பக்ருதீன் நன்றியுரை யாற்றினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!