ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுரை படி, பேரூராட்சிகளின் சிவகங்கை மண்டல உதவி இயக்குநர் ராஜா வழிகாட்டுதல் படி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி திருமண மகாலில்தமிழக முதல்வரின் மக்கள் சந்திப்பு சிறட்பு குறை தீர் முகாம் இன்று( 27.8.2019 ) காலை 10 மணியளவில் தொடங்கியது இதில் மண்டபம் வருவாய் ஆய்வாளர் சிவகுமார், மண்டபம் கிராம நிர்வாக அலுவலர், செந்தில்குமார் மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் மெய்மொழி, மண்டபம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் முனியசாமி உள்பட அனைத்து துறை பணியாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றனர். இதில் மண்டபம் பேரூராட்சி 18-வார்டு மக்கள் பங்கேற்று முதியோர் ஓய்வூதியம், இலவச வீடு, வாரிசு சான்று, பட்டா மாறுதல் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர். இக்குறை தீர் முகாம், மண்டபம் பேரூராட்சியில் 31.8. 2019 வரை நடைபெற உள்ளது பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கேட்டு கொண்டுள்ளார்.
மண்டபம் பேரூராட்சியில் முதல்வரின் மக்கள் சந்திப்பு சிறப்பு குறை தீர் முகாம்
எழுதியவர்: mohan August 27, 2019, 2:05 pm




You must be logged in to post a comment.