தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவ சட்டசபை பிரதிநிதிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து பதவியேற்பு விழா நடந்தது.ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை தாங்கினார்.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் சொ .சுப்பையா தலைமை தாங்கி மாணவ தலைவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அப்போது பேசுகையில் , பள்ளி அளவிலான தேர்தல் தலைமை பண்பை வளர்க்கும்.வரும் காலத்தில் சிறந்த தலைவர்களை உருவாக்கும்.தேர்தலில்தயக்கமின்றி போட்டியிடவும்,
மக்களுக்கு சேவையற்ற வேண்டும் என்ற எண்ணமும் உருவாக வேண்டும் என்பதற்காக நடத்தப்படுவதுதான் இந்த தேர்தல் முறையாகும்.மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதே ஆசிரியர்களின் கடமை.பயம் தெளிந்தால் வாழ்க்கையில் வெற்றி எளிதில் கிடைக்கும்.இந்த பள்ளிக்கு நான்காவது முறையாக நிகழ்வுகளுக்கு நான் வர காரணம் உங்கள் பள்ளியின் புதுமையான செயல்பாடுகள் தான் .இங்கு படிக்கும் மாணவர்கள் மிகப்பெரிய ஆளுமைகளாக வருவார்கள் என்பது உறுதி . பள்ளிக்கு பாராட்டுக்கள்.இவ்வாறு பேசினார்.பதவியேற்ற மாணவ தலைவர்கள் உறுதிமொழி வாசித்து,ஒப்புகை சீட்டில் கையெழுத்திட்டு தங்களின் புகைப்படம் ஒட்டிய சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.மாணவ தலைவராக சபரியும், துணை தலைவராக ஜோயல் ரொனால்டும், வேளாண்மை துறை அமைச்சாராக சிரேகாவும் ,சுகாதார அமைச்சராக ஜனஸ்ரீயும் ,கல்வித்துறை அமைச்சராக ஐயப்பனும் பதவியேற்றனர். பதவியேற்ற அனைவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டது. தலைவர்கள் ஓட்டு போட்ட மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். ஆசிரியை செல்வ மீனாள் நன்றி கூறினார்.ஏராளமான பெற்றோர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.பெற்றோர்கள் சார்பில் ஆசிரியை ராணி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.