17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடிநீர் வழங்காததை கண்டித்து நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் 

குடிநீர் வழங்காததை கண்டித்து நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் 

எழுதியவர்: mohan August 27, 2019, 12:24 pm

நிலக்கோட்டை அருகே  உள்ள முசுவனூத்து  கிராமத்தில்  ஆதிதிராவிடர் காலனியில் 2 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் . உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தர்ணா மற்றும் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.    இதனை அறிந்த நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி செல்வராஜ் விரைந்து வந்து மக்களிடம் உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இருப்பினும் தாங்கள் நேரில் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்கள் என கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.      இதனை ஏற்று உடனடியாக அப்பகுதிக்கு  நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்து உடனே தண்ணீர் வழங்க அங்கிருந்த கிராமம் ஊராட்சி  பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!