திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் போது ராஜன் தலைமையில் வேதாரண்யம் பகுதியில் அம்பேத்கார் சிலையை சிலர் உடைத்தெறிந்தது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தச் சாலை மறியலில் ஈடுபட்ட தொகுதி செயலாளர் தமிழரசன், ஒன்றிய செயலாளர் போஜராஜன் நகரச் செயலாளர திருப்பதி உள்பட 20 பேர்களை நிலக்கோட்டை நால் ரோட்டில் சாலைமறியல் செய்ததாக நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் கைதுசெய்து ஒரு தனியார் மகாலில் அடைத்து வைத்தார்.
செங்கத்தில் இரு வேறு இடங்களில் அம்பேத்கர் சிலை உடைத்தற்க்குஎதிர்ப்பு தெரிவித்து அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல்..திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி மற்றும் மேல்பள்ளிபட்டு ஆகிய இருவேறு இடங்களில் வேதாரான்யம் பகுதியில் சட்டமேதை அம்பேத்கர் சிலையைஉடைத்தற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும் சிலை உடைத்தவர்களை கைது செய்யகோரியும்அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலலால் பரபரப்பு..செங்கம் தோக்கவாடி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுமார் 50க்கும்மேற்பட்டோர் திருவண்ணாமலை – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தைசிறைபிடித்து திடிர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து சுமார் 30 நிமிடம்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்னர் தகவல் அறிந்துவந்த செங்கம் காவல்ஆய்வாளர் ஜெயந்தி சம்பவ இடத்திற்க்குநேரில் வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசபேச்சை தொடர்ந்து சாலைமறியல்கைவிடப்பட்டது. இதேபோன்று மேல்பள்ளிபட்டு பகுதியில் நீப்பத்துறை – செங்கம் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை மேல்செங்கம் காவல்துறையினர் சமரபேச்சுவார்த்தை நடத்திகலைக்க சென்றனர்செங்கம் பகுதிகளில் அடுத்தடுத்து இருவேறு இடங்களில் சாலை மறியலால் பரபரப்புஏற்பட்டது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில், ஏற்பட்ட சாதிக்கலவரத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. அதை கண்டித்து திருவண்ணாமலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அறிவொளி பூங்கா அருகே கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் ப.செல்வன், எம்.ரவி, சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், டி.கே.வெங்கடேசன், வி.சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.