மதுரை தேனி மெயின் ரோட்டில் அமைந்துள்ள முடக்கு சாலை அருகே வைகை கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.இந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் இது இரண்டாவது முறையாகும்.வைகையில் இருந்து மதுரை மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக இரண்டு புறமும் குடிநீர் குழாய்கள் நிலத்தடி க்குள் அரசரடி நீரேற்று நிலையம் வரை கொண்டு செல்லப்படுகின்றன.அண்மையில் கோச்சடை அருகே அதிகாலை ஏற்பட்ட உடைப்பின் காரணமாக மிகப்பெரிய அளவில் குடிதண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோன்று இன்றும்26.08.19 மதுரை தேனி மெயின் ரோட்டில் முடக்கு சாலையில் திடீரென குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலை முழுவதும் பெருக்கெடுத்து ஓடியது.மாலை 6 மணியளவில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஓடிய வெள்ளப் பெருக்கு ஏறக்குறைய ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர் இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் கேட்டபோது இரவுக்குள் அடைப்பை முழுவதுமாக சரி செய்து காலை சீரான தண்ணீர் விநியோகத்தை மேற்கொண்டு விடுவோம் என்றனர்.கடந்த ஒரு மாதத்திற்குள் இந்த பகுதியில் இது இரண்டாவது சம்பவமாகும். மதுரை மக்கள் கடும் குடிநீர் பற்றாக்குறையை தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் மதுரை மாநகராட்சியில் தொடர் அலட்சியம் பொதுமக்களை வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.