17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேடசந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மர்மநபர்கள் லாரியை வழிமறித்து கொள்ளை

வேடசந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மர்மநபர்கள் லாரியை வழிமறித்து கொள்ளை

எழுதியவர்: mohan August 27, 2019, 10:12 am

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டி என்னுமிடத்தில் கரூர் -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று26.08.19 இரவு சுமார் ஒரு மணி அளவில் அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் மத்தியபிரதேசத்தில் இருந்து மதுரைக்கு உளுந்தம்பருப்பு ஏற்றிவந்த லாரியை வழிமறித்து ஓட்டுனர் அரசன்குமரன் என்பவரை கடுமையாக தாக்கி அவரிடம் இருந்த ரூபாய் 14 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி அருணா கொடியையும் பறித்துச் சென்றனர்.புகாரின் அடிப்படையில் வேடசந்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதேபோல் சம்பவம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வடமதுரை அருகே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக வேடசந்தூர் தாலுகா பகுதிகளில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுகிறது. காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!