18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை தகர்க்கப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பெரியார் சிலை அருகே கண்டன போராட்டம் நடத்தினர்.

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை தகர்க்கப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பெரியார் சிலை அருகே கண்டன போராட்டம் நடத்தினர்.

எழுதியவர்: mohan August 26, 2019, 7:53 pm

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கர் சிலையை பட்டப்பகலில் சிலர் சேதப்படுத்தி உடைத்தனர். இந்த சம்பவத்திற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இரவோடு இரவாக காவல்துறை புதிய அம்பேத்கர் சிலையை அங்கே நிறுவியுள்ளனர்.இருப்பினும் அம்பேத்கர் சிலை தகர்ப்பட்டதை கண்டித்து திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக பெரியார் சிலை அருகில் கண்டன போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.வழ. க. மோகன் பி.கா. அம்பேத்வளவன் இரா. தனராசு ச. நியூட்டன் ஜெ. விடுதலைக்கனல் கிராம. ஏசுமுனுசாமி தொகுதி துணைச்செயலாளர்,வெற்ற முரசு விடுதலைஆறுமுகம் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!