17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவர் குருபூஜைக்கு வருகைதரும் டிடிவி தினகரனை வரவேற்பது குறித்து அமமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம்

உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவர் குருபூஜைக்கு வருகைதரும் டிடிவி தினகரனை வரவேற்பது குறித்து அமமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம்

எழுதியவர்: mohan August 26, 2019, 7:20 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வருகிற 6ம்தேதி மூக்கையாத்தேவர்குருபூஜைவிழா கொண்டாட ப்படுவதையொட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் உள்ள மூக்கையாத்தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த வருகைதரும் அமமுக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்பது குறித்தும். குருபூஜையில் நினைவு அஞ்சலி செலுத்துவது தொடர்பாக குறித்தும் அமமுக சார்பில் நிர்வாகிகள் தொண்டர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பல்வேறு மாற்றுக்கட்சியினை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர்கள் அமமுகவில் இனைந்தனர். அவர்களை மதுரை புறநகர் மாவட்டசெயலாளர் மகேந்திரன் சால்வை அணிந்து வரவேற்றார். இந்நிகழ்ச்சி மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மேலும் உசிலம்பட்டி நகரசெயலாளர் குனசேகரபாண்டியன், ஏகேடி ராஜா, செல்லம்பட்டி ஒன்றியசெயலாளர் தேவராஜ், மற்றும் அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!