17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக மக்கள் சேவை மையம் சாா்பில் அனாதைப் பிணம் அடக்கம்..

உலக மக்கள் சேவை மையம் சாா்பில் அனாதைப் பிணம் அடக்கம்..

எழுதியவர்: mohan August 26, 2019, 7:00 pm

திருவண்ணாமலை -10.7.2019 –ம் தேதி  நார்த்தாம்பூண்டி கிராமத்தில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 75 வயது மதிக்க தக்க பெண் நபர் உடல் நலம் குன்றியிருந்தவரை சமூக சேவகர் மணிமாறன் மற்றும் சிவராஜ்  அரசு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.. மேற்படி  பெயர் விலாசம் தெரியாத  பெண்  சிகிச்சை பலனின்றி 19.08.2019 –ஆம் தேதி பகல் 14.56 மணிக்கு இறந்துவிட்டாா்அவர் உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால்  பிரேதத்தை திருவண்ணாமலை மாவட்டம் உலக மக்கள் சேவை மையத்தின் தலைவரான மணிமாறன்  வைத்துள்ள தொண்டு நிறுவனம் மூலமாக அடக்கம் செய்யப்பட்டது. உடன் காவல் அதிகாரி உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் மாவட்ட செயலாளர் வி.மூர்த்தி, ஆர்.வெங்கடேசன் உடன் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.. திருவண்ணாமலை அடுத்த தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன்  இந்தியா முழுவதும் பல்வேறு சமூக பணிகளை பொதுநல நோக்கத்துடன் செய்துவருகிறார். தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்தும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தும், ஆதரவற்றோர் இறந்தவர்களை தமிழகம் முழுவதும் 950 பேரை நல்லடக்கம் செய்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!