17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் உள்பட நால்வர் கைது

இராமநாதபுரம் அருகே வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் உள்பட நால்வர் கைது

எழுதியவர்: mohan August 26, 2019, 5:52 pm

இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன் வலசை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த டிரைவர் பூமிநாதன். கஞ்சா விற்பனை வழக்கில் தொடர்புடைய இவரை மத்திய வருவாய் துறை அதிகாரிகள் கடந்த இரு வாரங்களுக்கு முன் கைது செய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து, புழல் சிறையில் அடைத்தனர். இவரது மனைவி நஜிமா (எ)வள்ளி, 42. வீட்டில் தையல் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பிரப்பன் வலசை கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி வள்ளி வீட்டை உச்சிப்புளி போலீசார் 24.8.19 ல் சோதனை செய்தனர். வள்ளி வீட்டில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மிரட்டல், சட்ட விரோதமாக ஆயுதம் பதுக்கல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வள்ளி மீது உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிந்தார். இன்ஸ்பெக்டர் முத்து பிரேம் சந்த் விசாரணையில், பூமிநாதனுக்கு சென்னையைச் சேர்ந்த , வள்ளிக்கு தர்மபுரி அருண், கோவை வேலுச்சாமி மகன் சங்கர் ராஜ், செல்வராஜ் மகன் மணிகண்டன் ஆகியோர் துப்பாக்கி சப்ளை செய்தது தெரிந்தது . இதனடிப்படையில், ராமநாதபுரம் தீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் தனிப்படை கோவை ராமநாதபுரம் சென்று, அங்கி பதுங்கி இருந்த அருண், மணிகண்டன், சங்கர் ராஜ் ஆகியோரை நேற்று கைது செய்தனர். வள்ளி உள்பட 4 பேரையும் ராமநாதபுரம் இரண்டாவது உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி ராமகிருஷ்ணன் உத்தரவுப்படி செப். 9 ஆம் தேதி நீதிமன்ற காவல் ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!