18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » லஞ்சம் பெற்ற போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் சஸ்பெண்ட்

லஞ்சம் பெற்ற போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் சஸ்பெண்ட்

எழுதியவர்: mohan August 26, 2019, 5:32 pm

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வடக்கு தாலுகா வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான லைசென்ஸ், பழகுனர் உரிம், பதிவு எண் போன்றவை பெறுவதற்காக ஏராளமானோர் வருகின்றனர். அவ்வாறு வருபவர்களிடம் பணியை விரைந்து உரிமத்தை வழங்க சில ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து வட்டார போக்குவரத்து உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மேற்பார்வையாளர் உட்பட 3 நிரந்தர ஊழியர்கள், 2 தற்காலிக ஊழியர்கள் என 5 பேர் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. 5 பேரையும் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!