17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கேஸ் சிலிண்டர் கசிவினால் 3 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகின

கேஸ் சிலிண்டர் கசிவினால் 3 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகின

எழுதியவர்: mohan August 26, 2019, 3:36 pm

தர்மபுரி மாவட்டம் செங்கோடப்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் சக்திவேல் (40)கூலி தொழிலாளியான இவரின் குடிசை வீட்டில்  கேஸ் சிலின்டரில் கசிவு ஏற்பட்டு தீடிரென 100 அடி உயரத்திற்க்கு தீ பிளம்பு கிளம்பியது  இதையடுத்த அருகில் குடியிருந்த மனோகரன் (61) ராஜீ (65) ஆகியோரின் குடிசை வீட்டிற்க்கும் தீ மளமளவென பரவியது பொதுமக்கள் உடனடியாக தண்ணீர்  கொண்டு வந்து தீயை அணைக்க முற்பட்டனர் தீ அதிக அளவில் பரவியதால் பாலக்கோடு தீயணைப்பு துறையிறனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் தீயனைப்பு  துறையினர் தீயை அணைத்தனர் இருப்பினும் வீட்டில் இருந்த தங்க நகைகள் 7 சவரன், பணம் 72ஆயிரம் இரு சக்கர வாகனம் வீட்டிலிருந்த நிலப்பத்திரம்  பீரோ கட்டில் தட்டு முட்டு சாமன்கள் உள்ளிட்ட 2இலட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின பாலக்கோடு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!