வேதாரண்யத்தில் சட்டமேதை அம்பேத்கர் சிலையை சிலர் சேதப்படுத்தி உடைத்தனர். இந்த சம்பவத்திற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இரவோடு இரவாக பிரச்சினையை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் புதிய அம்பேத்கர் சிலையை அங்கே நிறுவியுள்ளனர். ஓரளவு பதட்டம் குறைந்திருந்தாலும் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்துவருகிறது. அதன் ஒருபகுதியாக திண்டுக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக காமராஜர் சிலை அருகில் திங்களன்று (26.08.19) மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பழனிச்சாமி, சக்திவேல், மகாமுனி ஆகியோர் தலைமை வகித்தனர் இதில் 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப் பட்டதை கண்டித்தும் இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி திண்டுக்கல்லில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சாலை மறியல் போராட்டம்
எழுதியவர்: mohan August 26, 2019, 2:39 pm




You must be logged in to post a comment.