17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகரம் முழுவதும் பல்வேறு கடைகளில் 10 ரூ காயினை வாங்க மறுக்கும் வணிக நிறுவனங்கள்

மதுரை மாநகரம் முழுவதும் பல்வேறு கடைகளில் 10 ரூ காயினை வாங்க மறுக்கும் வணிக நிறுவனங்கள்

எழுதியவர்: mohan August 26, 2019, 11:40 am

மதுரை மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள பழமுதிர்சோலை காபி கடை வாங்க மறுப்பதாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்தார்.. இந்த கடையில் மட்டுமல்லாது மதுரையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் பெட்ரோல் நிலையங்கள்.. மேலும் பத்து ரூபாய் நாணயம் கொடுத்தால் பில் தர முடியாது எனவும் தெரிவிக்கின்றனர் ..ரிசர்வ் வங்கி பல முறை அறிவித்தும் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் ..இதில் எந்த ஒரு குழப்பமும் அடையத் தேவையில்லை என வணிக நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் தகவல் தெரிவித்த நிலையிலும் ஒரு சில வணிக நிறுவனங்களும் மற்றும் அரசு பெட்ரோல் பங்கு மற்றும் தனியார் பெட்ரோல் பங்குகளிலும் இதை வாங்க மறுக்கிறார்கள் மேலும் பல வங்கிகள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள் வங்கிகள் அந்தந்த பகுதிகளில் முகாம் ஒன்றை அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!