17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி !

மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி !

எழுதியவர்: mohan August 25, 2019, 2:54 pm

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்கும் பல்சுவை நிகழ்ச்சிகள் அகில இந்திய வானொலி நிலையமான மதுரை வானொலியில் ஒலிபதிவு செய்யப்பட்டது.மதுரை வானொலி நிலையத்திற்கு மாணவ,மாணவியர் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில சென்றனர்.மதுரை வானொலி நிலையத்தினர் மாணவர்களை வரவேற்று ஒலி பதிவு அறைக்கு அழைத்து சென்றனர்.பள்ளி மாணவர்கள் முதல் வகுப்பு சபரீஸ்வரன் மற்றும் விஜய் ஆகியோர் காய்கறி தொடர்பான பாடல்களை தனது மழலை மொழியில் பாட , சிவகங்கை சீமையின் பெருமைகளை ஜோயலும்,புகழேந்தியும் விளக்கி கூற ,விரல்நுனியில்விடுகதைகளைஅனுசுயா,திவ்யஸ்ரீ,சபரி,அய்யப்பன் அழகாக சொல்ல,விந்தையான வில்லுப்பாட்டை ஈஸ்வரன்,மகாலட்சுமி,மெர்சி ஆகியோரும் சிந்திக்கும் விதமாக நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். மாணவி கீர்த்தியா,நதியா ஆகியோர் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.ஆசிரியை செல்வமீனாள் மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.இப்பள்ளியின் நிகழ்ச்சிகள் டிசம்பர் மாதம் 17 மற்றும் 26ம் தேதிகளில் மாலை 6.15 மணிக்கு ஒலிபரப்பாகவுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!