17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் ரத்த தான முகாம்

துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் ரத்த தான முகாம்

எழுதியவர்: mohan August 24, 2019, 7:25 pm

இந்திய தாய் திருநாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான நன் மக்கள் ரத்தத்தை தானமாக அளித்தனர்.இந்நிகழ்ச்சிக்கு இந்திய தூதரக அதிகாரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஈமான் பொது செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின் தலைமை வகித்தார்.

ஊடகத்துறைசெயலாளர்முதுவை தாயத்துல்லா,விழாக்குழு செயலாளர் ஜமால், அலுவலக செயலாளர் நிஜாம்,செயற்குழு உறுப்பினர் கீழை ஜமால் ,ஜாஹிர்,உஸ்மான் மற்றும் பலர் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர். பல்வேறுஅமைப்புகளை சேர்ந்தோர் பங்கேற்றனர். ஊடக ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!