18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி டி.இ.எல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதலமைச்சிரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் ராஜசேகரின் தலைமையில் நடைபெற்றது.

உசிலம்பட்டி டி.இ.எல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதலமைச்சிரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் ராஜசேகரின் தலைமையில் நடைபெற்றது.

எழுதியவர்: mohan August 23, 2019, 12:48 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. மேலும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான மனுக்களும் பெறப்பட்டது. இதனைதொடர்ந்து 28லட்சம் மதீப்பீட்டில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி. பெரியபுள்ளான், சரவணன், மாணிக்கம், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தர்மேந்திபிரசாத்யாதவ், உசிலம்பட்டி கோட்டாட்சியர் பானுகோபன். வட்டாட்சியர் செந்தாமரை உட்பட அரசு அதிகாரிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.விழாவில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மதுரை ஆட்சியர் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்தி ரநாத் குமாரிடம் மனுக்களை அளிப்பதில் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.இதனால் மனுக்கொடுக்க வந்த பலர் மனுவை அளிக்காமல் திருப்பிச் சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!