17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வத்தலக்குண்டுவில் அரசு கல்லூரி அமைக்க கோரி பழைய மாணவர் மன்றத்தினர் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை மனு

வத்தலக்குண்டுவில் அரசு கல்லூரி அமைக்க கோரி பழைய மாணவர் மன்றத்தினர் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை மனு

எழுதியவர்: mohan August 23, 2019, 11:49 am

வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 300க்கும் குறைவாகவே மாணவர்கள் படிக்கின்றனர்.. ஆனால் 30க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கொண்ட பழைய ஆங்கிலேயர் காலத்து எச் வடிவ இரண்டு’ மாடி உள்ளது கட்டிடமும் புதிதாக கட்டப்பட்ட 30 வகுப்பறைகளுக்கு மேலுள்ள 3 மாடி கட்டிடமும் உள்ளது இரண்டும் தனித்தனியே 300 அடிஇடைவெளியில் உள்ளது தேவையான அளவில் மைதானங்களும் உள்ளன ஆகையால் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் நடைபறும் பள்ளியை புதிய கட்டிடத்திற்கு மாற்றி விட்டு ஆங்கிலேயர் காலத்து கட்டிடத்தில் அரசு இருபாலர் கல்லூரி அமைக்க வேண்டும் என்று கோரி அரசு கல்லூரி அமைப்பு கமிட்டி ஏற்படுத்தினர். அரசு கல்லூரி அமைக்க அரசிடம் அனுமதி பெற்றுத் தர கோரிக்கை மனு கொடுக்க நிலக்கோட்டை வந்தனர் நிலக்கோட்டையில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகரிடம் அதற்கான மனுவை கொடுத்தனர்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி அமைப்பு கமிட்டி தலைவர் வக்கீல் ராஜா செயலாளர் கோபால் பொருளாளர் கென்னடி துணைத் தலைவர் பால்ராஜ் ஒருங்கிணைப்பாளர் சூரிய மூர்த்தி நிர்வாகிகள் மோகன் மருதராஜன் ராஜேந்திரன் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தேன்மொழி சேகர் வத்தலக்குண்டு அரசு ஆண்கள் பள்ளியை நேரில் வந்துஆய்வு செய்து பின்னர் அரசு அனுமதி பெற்றுத்தருவதாக கூறினார்

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!