17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலையில் இருபது தினங்களாக குடிநீா் விநியோகம் இல்லை.பொதுமக்கள் குற்றச்சாட்டு.

திருவண்ணாமலையில் இருபது தினங்களாக குடிநீா் விநியோகம் இல்லை.பொதுமக்கள் குற்றச்சாட்டு.

எழுதியவர்: mohan August 23, 2019, 10:32 am

திருவண்ணாமலை கல் நகரில் இருபது தினங்களாக குடிநீர் சப்ளை செய்யப்படாமல் இருக்கிறது என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.நகராட்சி அலுவலகத்தில் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இதுவரை ஒரு நாள் கூட குடிநீர் வரவில்லை என்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.இவர்களின் குடிநீர்ப் பிரச்சினையை சரிசெய்து தொடர்ந்து அவர்களுக்கு குடிநீர் வழங்க ஆவன செய்ய வேண்டும் என்பதை அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குடிநீர் சப்ளை தொடர்ந்து அளிக்கவில்லை என்று சொன்னால் மிகப்பெரிய போராட்டத்தை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேற்கொள்ள உள்ளதாக எச்சரிக்கை விடுத்து உள்ளனர் எனவே இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க வேண்டும் வழங்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!