17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாம்பன் கடலில் 800 கிலோ கடல் அட்டைகள் உயிருடன் நாட்டுப்படகு பறிமுதல்

பாம்பன் கடலில் 800 கிலோ கடல் அட்டைகள் உயிருடன் நாட்டுப்படகு பறிமுதல்

எழுதியவர்: mohan August 22, 2019, 6:02 pm

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்பட உள்ளதாக மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாம்பன் பாலம் அருகே தென் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நாட்டுப்படகை சோதனை செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் அருகில் சென்றனர். அதிகாரிகளை கண்டதும் படகில் இருந்த இருவர் கடலில் குதித்து தப்பி னர். இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் படகை சோதனை செய்தனர். அதில் தலா 12 கிலோ வீதம் 69 மூடைகளில் 829 கிலோ கடல் அட்டைகள் உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து கடல் அட்டைகள், படகு கைப்பற்றப்பட்டது. கைப்பற்றிய கடல் அட்டைகள், படகை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!