திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா செம்மணம்பட்டி பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை கடந்த 14.12.2017 அன்று கடத்திச் சென்று அய்யலூர் அருகே உள்ள மலைப் பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குப்பம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் ( 19) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதந்த வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் வடமதுரை காவல்துறையினருக்கு குழந்தையின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
வேடசந்தூர் அருகே நான்கு வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..
எழுதியவர்: mohan August 22, 2019, 5:42 pm




You must be logged in to post a comment.