திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது.. மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் மாவட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் கடன் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும் .செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முழுவதுமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .பின்னர் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்
வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி திருவண்ணாமலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan August 22, 2019, 5:27 pm




You must be logged in to post a comment.