மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்தது வடுகபட்டி கிராமம்.இக்கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் காலணிப்பகுதியில் கடந்த ஒரு வருடமாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்தும் பதில் இல்லை.இதனால் ஆவேசமடைந்த மக்கள் வடுகபட்டி மதுரை தேனி தேசியநெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
;.இதனால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்;டது.சம்பவமறிந்த போலிசார் கிராமமக்களிடம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.சாலையிலிருந்து எழுந்த மக்கள் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் வராமல் கலைந்து செல்ல மாட்டோம் என சாலையின் ஓரத்திலேயே நின்று கொண்டிருந்தனர்.இதனால் மீண்டும் மறியல் ஈடுபடும் சூழ்நிலை உருவானது.பின்னர் போலிசார் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை அழைத்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதைத் தொடாந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
எழுதியவர்: mohan August 22, 2019, 12:03 pm




You must be logged in to post a comment.