வண்ணாங்குண்டில் இருந்து பெரியபட்டினம் செல்லும் வழி சாலையில் அமைந்துள்ள மான்குண்டு ஊரணி பல வருடங்களாக கருவேல மரங்கள் சூழ்ந்து கேட்பாரற்று கிடக்கிறது ..கடந்த ஒரு வருடமாக இதை சுத்தம் செய்ய சொல்லி கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கேட்பாரற்று கிடந்த மான்குண்டு ஊரணியை பொதுமக்களால் பயன்படுத்தமுடியாமல் இருந்தது,
மழைக்காலம் தொடங்கிவிட்டதால் அந்த ஊரணியை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அந்த கருவேல மரங்களை இன்று வண்ணாங்குண்டு லஜ்னத்துல் இர்ஷாத் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் JCB இயந்திரம் பயன்படுத்தி சுத்தம் செய்தனர்,வண்ணாங்குண்டு சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து சமூக பணி செய்து வரும் லஜ்னத்துல் இர்சாத் இளைஞர் நற்பணி மன்றத்தினரை பொதுமக்கள் பாராட்டினர்.










You must be logged in to post a comment.