தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தற்போது திமுக துணைதலைவர் துரைமுருகன் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவினர் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்துவரும் வளர்ச்சி திட்டபணிகள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழக அரசால் ஒதுக்கப்படும் நிதியில் திட்டபணிகள் சரியான முறையில் நடக்கிறதா, இல்லையெனில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வர். இந்நிலையில் இக்குழுவினர் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் உள்ள 58கிராம கால்வாய் திட்ட தொட்டிப்பாலத்தை ஆய்வு செய்தனர். பின்பு செய்தியாளர்களுக்கு அளத்த பேட்டியில் திமுக ஆட்சியில் கலைஞர்; முதலமைச்சராக இருந்த போது 58 கிராம பாசன கால்வாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டது. அதற்கு பிறகு இப்போது இந்த திட்டம் முழுமையடைந்து நிறைவடைந்துள்ளது மனதிற்கு மகிழ்ச்சியை தருவதாக சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். இந்த குழுவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கீதாபாஸ்கர், உதயசூரியன், பழனிவேல்தியாகராஜன், முகம்மது அபுபக்கர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சிதலைவர் ராஜசேகரன், மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 58 கிராம கால்வாய் பாசன திட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது மனதிற்கு மகிழ்ச்சியை தருவதாக திமுக துணைத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
எழுதியவர்: mohan August 21, 2019, 8:19 pm




You must be logged in to post a comment.