உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் மலை வாழ் மக்களுக்கு தனியார் அமைப்பு சார்பில் இலவச வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குறிஞ்சி நகர் கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மலைப்பகுதியில் கிடைக்கும் தேன், உள்ளிட்ட பொருட்களை எடுத்து விற்பனை செய்து அதிலிருந்து கிடைக்கும் பணத்தை வைத்து தங்களது பிழைப்பை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதி மக்களுக்காக தமிழக அரசால் கட்டிகொடுக்கப்பட்ட வீடுகளும் பல வருடங்களாக இடிந்து சேதமடைந்து காணப்படுகிறது. இது குறித்து அரசிடம் முறையிட்டும் பலனில்லை.இந்நிலையில் தனியார் அமைப்பைச் சேர்ந்த பவுல் தேவ அக்கினி சபை தலைவர் கருணாகரன் தலைமையில் மலைவாழ் மக்களுக்கு இலவசமாக 3 வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டது. அந்த 3 வீடுகளையும் திறந்து வைத்து அவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இந்நிகழ்ச்சியில் தேவஅக்கினி சபை செயலாளர் ஜெபாஸ்டின், வில்சன் மற்றும் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள், மலைவாழ் மக்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் தேவஅக்கினி சபை சார்பில் மலைவாழ் மக்கள் அனைவருக்கும் கறி விருந்து பரிமாறப்பட்டது.







You must be logged in to post a comment.