18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் திறன் பயிற்சி உதவி இயக்குநருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

இராமநாதபுரம் திறன் பயிற்சி உதவி இயக்குநருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

எழுதியவர்: mohan August 21, 2019, 7:50 pm

இராமநாதபுரம் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் சை.ரமேஷ்குமார் . தொழில் பயிற்சி துறை மேம்பாட்டிற்கு 2017-18 ஆம் ஆண்டில் ரமேஷ் குமார் ஆற்றிய சீரிய பணியை பாராட்டி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது மற்றும் ரூ.10 ஆயிரம் காசோலையை, தமிழக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் நிலோபர் கபில், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் ஜோதி நிர்மலா சாமி, வெளிநாட்டு மனித ஆற்றல் நிறுவன மேலாண் இயக்குநர் தர்மேந்திரா பிரதாப் யாதவ் ஆகியோரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். விருது பெற்ற ரமேஷ்குமார், மண்டபம் முகாம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1982ல் பத்தாம் வகுப்பு, 1982- 85 ஆம் ஆண்டு வரை மதுரையில் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் முடித்தார். அண்ணா பொறியியல் கல்லூரியில் பி.இ., பட்டம் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!