சிதம்பரம் அண்ணாமலை நகர் கலுங்குமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடிகோழி பாண்டியன் 40 ..இவர் மீது 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இவர் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவமனை அருகில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு சாப்பிட்டு கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கோழி பாண்டியன்மீது வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஒடி விட்டனர் ..சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அபிநவ் சிதம்பரம் சரக போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் அண்ணாமலை நகர் போலீசார் பார்வையிட்டு கொலை செய்யப்பட்டு இறந்து போன கோழி பாண்டியனின் உடலைக் கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்..இந்த படுகொலை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்
.செய்தி வி காளமேகம்




You must be logged in to post a comment.