17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளியில் ஓட்டுப்போட்டு தேர்தல் மூலம் மாணவ தலைவரை தேர்ந்தெடுத்தல் …மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்

பள்ளியில் ஓட்டுப்போட்டு தேர்தல் மூலம் மாணவ தலைவரை தேர்ந்தெடுத்தல் …மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்

எழுதியவர்: mohan August 21, 2019, 7:14 pm

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஜனநாயகத்தில் புதிய முயற்சியாக வாக்கு சாவடி அமைத்து பள்ளி மாணவ தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தேர்தல் தொடர்பான விதிமுறைகளை மாணவர்களிடம் விளக்கினார்.

தேர்தலில் மாணவ தலைவர் ,, துணை தலைவர் , கல்வி அமைச்சர், வேளாண் அமைச்சர், சுகாதார அமைச்சர் ஆகிய துறைகளுக்கு போட்டி நடைபெற்றது.மாணவர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு வாக்கு சீட்டில் ஒட்டு போட்டனர் .வாக்கு எண்ணிக்கை விரைவில் நடைபெற்று பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும்.தேர்தலுக்கு வேண்டிய வாக்கு பெட்டிகள்,ஒட்டு சீட்டுகள்,வேட்பாளர் பெயர் பட்டியல் ,கையில் வைக்கும் மை போன்ற ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கருப்பையா ,முத்து லெட்சமி , ஸ்ரீதர் ஆகியோர் செய்து இருந்தனர்.வாக்கு சாவடி அலுவலர்களாகவும் ஆசிரியர்கள் செயல்பட்டனர்.ஆசிரியர்களும் இந்த தேர்தலில் ஒட்டு போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!