17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை பகுதியில் திடீரென பெய்த மழை

நிலக்கோட்டை பகுதியில் திடீரென பெய்த மழை

எழுதியவர்: mohan August 21, 2019, 11:49 am

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் உள்ள குளத்துப்பட்டி, ஊத்துப்பட்டி ,கட்டக்கூத்தம்பட்டி, கல்லுப்பட்டி ஆவாரம்பட்டி விளாம்பட்டி முத்துலிங்கபுரம் மட்டபாறை கல்லடி பெட்டி சிலுக்குவார்பட்டி , கோடாங்கிநாயக்கன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 2ஆண்டுகளுக்கு மேலாக மழை இல்லாமல் இருந்தது. கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிப்புக்குள்ளாகி வந்தனர்.இந்நிலையில்   கார் மேகங்களுடன், பலத்த காற்று வீசியும், பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கத்தால் இருந்த பொதுமக்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் இதே மழை தொடர்ந்து இருக்குமா ?என பொதுமக்கள் விவசாயிகள் எதிர்பார்ப்பில் பேசிக்கொண்டார்கள். இந்த மழை மாலை 5 மணிக்கு மேல் அவ்வபோது விட்டுவிட்டு சாரலாக பெய்தது.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!