இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருந்து நிலையம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்குரிய நபரை பிடித்தனர். விசாரணையில், கடலாடி தாலுகா வாலிநோக்கம் செய்யது இப்ராகிம் மகன் செய்யது 26, என தெரியவந்தது. கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், சிக்கல் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடிய வழக்கு இவர் மீது நிலுவையில் உள்ளது. இதனையடுத்து சாயல்குடி காவல் ஆய்வாளர் கனகாபாய், சார்பு ஆய்வாளர் கோட்டைச்சாமி, தலைமையில் செய்யதுவை போலீசார் கைது, அவரிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
சாயல்குடியில் பைக் திருடர் கைது
எழுதியவர்: mohan August 21, 2019, 10:39 am




You must be logged in to post a comment.