17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பேற்பு

இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பேற்பு

எழுதியவர்: mohan August 20, 2019, 8:52 pm

இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடந்தது . கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கோவிந்தன் தேர்தல் அலுவலராக பணியாற்றினார். இதில் அதிமுக., மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி , மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். 21 இயக்குநர்களும் தேர்வு செய்யப்பட்டனர். வங்கி துணைத் தலைவராக ஜெயஜோதி தேர்வு செய்யப்பட்டார். தலைவர் (முனியசாமி), துணைத் தலைவர் (ஜெயஜோதி) ஆகியோருக்கு கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ப.முருகேசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன் பிரபாகர்,ராஜ்ய சபா முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.நிறை குளத்தான், அதிமுக., மகளிரணி மாநில துணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி ( பரமக்குடி நகராட்சி முன்னாள் தலைவர்), அதிமுக., ஒன்றிய செயலாளர் தங்கமரைக்காயர் என்ற எம்.கே.கே.ஷேக் அப்துல் காதர் (மண்டபம்), வழக்கறிஞர் அங்குச்சாமி ( ராமநாதபுரம் ), ராமநாதபுரம் அதிமுக நகர் செயலாளர் எம். அங்குச்சாமி, முன்னாள் செயலாளர் கே.சி. வரதன், மண்டபம் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் எஸ்.நாகராஜன், மண்டபம் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் எம்.சுப்ரமணியன் (தெற்கு ) , கே.எம்.ஏ.சீமான் மரைக்காயர் (வடக்கு), பாரம்பரிய மீனவர் கூட்டுறவு சங்க இயக்குநர் சீனி காதர் முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பதவி ஏற்றுக் கொண்ட தலைவர், துணைத் தலைவர் , இயக்குநர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!