முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சமுதாய நல்லிணக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 20 ஆம் தேதியை தமிழக அரசு சமுதாய நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஆக்கிடாவலசை ஆரம்பப் பள்ளியில்தலைமைஆசிரியர்நா.கோமகன்தலைமையில்,‘ சமுதாய நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஆசிரியர் திருமேனி நாயகம் வாசிக்க பள்ளி மாணவ, மாணவியர் எடுத்துக் கொண்டனர். சத்துணவு அமைப்பாளர் தங்கம் ஏற்பாடு செய்தார்.
.




You must be logged in to post a comment.