கெய்டு டிரஸ்ட் இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் வலியுறுத்தியும், பள்ளி வயது குழந்தைகளிடம் கட்டாய கல்வி ஆகியவற்றை வலியுறுத்தி மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாம்பன், தங்கச்சி மடம்,மரைக்காயர் பட்டினம் , வேதாளை, சாத்தக் கோன் வலசை, பிரப்பன் வலசை, நொச்சியூரணி, மானாங்குடி ஊராட்சிகளில் நடைபெற்றது. முகாம்களில் மண்டபம் ஒருங்கிணைப்பாளர் சித்ரா மேரி, மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் முத்துக் கனி, மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். எற்பாடுகளை சமூக ஆர்வலர்கள் அர்சுணன், முத்து ஆகியோர் செய்தனர்.
மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
எழுதியவர்: mohan August 20, 2019, 7:10 pm




You must be logged in to post a comment.