17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்பு

இராமநாதபுரத்தில் நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்பு

எழுதியவர்: mohan August 20, 2019, 7:05 pm

முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி பிறந்த தினமான ஆகஸ்ட் 20-ஆம் நாள் ஆண்டுதோறும் சமுதாய நல்லிணக்க தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் சமுதாய நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அந்தவகையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ்தலைமையில், சமுதாய நல்லிணக்க நாள் உறுதிமொழியை அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.கண்ணபிரான், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜெ.சுரேஷ்கண்ணா உட்பட பலர் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!